நாகர்கோவிலில் சிவாஜிகணேசன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை; விஜய் வசந்த் எம்.பி. பங்கேற்பு
நாகர்கோவிலில் சிவாஜிகணேசன் படத்துக்கு மாலை அணிவித்து விஜய் வசந்த் எம்.பி. மரியாதை செய்தார்.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் சிவாஜிகணேசன் படத்துக்கு மாலை அணிவித்து விஜய் வசந்த் எம்.பி. மரியாதை செய்தார்.
பிறந்தநாள் விழா
தமிழ்த் திரையுலகில் நடிகர் திலகம் என போற்றப்பட்ட நடிகர் சிவாஜி கணேசனின் 95-வது பிறந்த நாள் விழா நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி எம்.பி. அலுவலகத்தில் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் விழா நடந்தது.
விழாவுக்கு விஜய் வசந்த் எம்.பி. தலைமையில் கட்சி நிர்வாகிகள் சிவாஜி கணேசன் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட தலைவர் நவீன் குமார், நிர்வாகிகள் விஸ்வம், கண்ணன், ஆரோக்கியராஜன், ராதாகிருஷ்ணன், மகாலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் வேப்பமூடு காமராஜர் சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த சிவாஜி கணேசன் உருவபடத்திற்கு காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நிர்வாகிகள் அலெக்ஸ் உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.