சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
வெள்ளகோவில், முத்தூர் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ பூஜை நடந்தது.
பிரதோஷம்
வெள்ளகோவில் சோழீஸ்வரர் ஆலயம், கண்ணபுரம் விக்ரமசோழீஸ்வரர்ஆலயம், மயில்ரங்கம் வைத்தியநாத சுவாமி கோவில், உத்தமபாளையம் காசிவிசுவநாதர் கோவில், புற்றிடம் கொண்டீஸ்வரர் கோவில்களில் உள்ள நேற்று மாலை பிரதோஷத்தை யொட்டி சிவபெருமானுக்கும், நந்திக்கும் சிறப்பு அலங்காரம், தேன், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, மஞ்சள், சந்தனம், மலர், பன்னீர் அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். புற்றுக்கண்ஆனந்த விநாயகர் கோவிலில் நேற்று முதல் 14-ந் தேதி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ராமாயணம் சொற்பொழிவு நடைபெறுகிறது.
முத்தூர்
முத்தூர் செங்கோடம்பாளையம், சோமயநல்லூர் கருணாம்பிகா உடனமர் கைலாயநாதர் கோவில், வள்ளியரச்சல் மாந்தீஸ்வரர் கோவில் மற்றும் நத்தக்காடையூர் பாலசவுந்திரவல்லி உடனமர் ஜெயங்கொண்டேஸ்வரர் கோவில், மருதுறை பச்சை மரகதவள்ளி உடனமர் பட்டீஸ்வரர் கோவில் ஆகிய சிவன் கோவில்களில் பிரதோஷ பூஜை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு நந்தி மற்றும் சிவன்-பார்வதிக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சிவன் கோவில் பிரதோஷ வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.