காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணிய சாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.


காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணிய சாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
x

காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணிய சாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

திருப்பூர்

காங்கயம்

காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணிய சாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

தைப்பூச தேர்த்திருவிழா

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணிய சாமி கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த வாரம் வீரகாளியம்மன் கோவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் வீரகாளியம்மன் திருவுலா காட்சி, வீரகாளியம்மன் தேர்த்திருவிழா, வீரகாளியம்மன் மலைக்கோவிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி, அடிவாரம் நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் சாமி எழுந்தருளல், மைசூரூ பல்லக்கில் சாமி மலையை வலம் வரும் நிகழ்ச்சி, திருக்கல்யாண உற்சவம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

நேற்று அதிகாலை 3.30 மணிக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களால், சாமிக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வேல் மற்றும் சேவற்கொடி கொண்டு, தேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் காலை 6 மணிக்கு மகர புஷ்ய நல்வேலையில் சாமி ரதத்திற்கு எழுந்தருளினார். மாலை 4 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது.

தேரோட்டம்

செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஈரோடு எம்.பி.கணேசமூர்த்தி, திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத், திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை, தாராபுரம் ஆர்.டி.ஓ.குமரேசன், சிவன்மலை உதவி ஆணையர் அன்னக்கொடி (பொருப்பு), திருப்பூர் தி.மு.க தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன், ஏ.எஸ்.பி.கிருஷ்ணமூர்த்தி, காங்கயம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ்குமார், ஒன்றியக்குழு துணை தலைவர் ஜீவிதா ஜவஹர், சிவன்மலை ஊராட்சி தலைவர் கே.கே.துரைசாமி மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள், பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுக்க பக்தர்களின் 'அரோகரா... அரோகரா...' கோஷங்களுக்கு மத்தியில் கிரிவல பாதையில், அசைந்தாடியபடி, திருத்தேர் உலா வந்தது. 200 மீட்டர் தூரம் இழுக்கப்பட்டு தேரோட்டம் நடந்தது. நடு வீதியில் மாலை 4:43 மணிக்கு தேர் நிலை நிறுத்தப்பட்டது.

காவடி, தீர்த்தக்குடம்

இன்றும்(திங்கட்கிழமை), நாளையும்(செவ்வாய்க்கிழமை) கிரிவல பாதையை தேர் சுற்றி வந்து, தேர் நிலைக்கு வரும். இந்த தேரோட்டத்தில் திருப்பூர், காங்கயம், வெள்ளகோவில், ஊதியூர், தாராபுரம், பல்லடம், குண்டடம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் காவடி, தீர்த்தக்குடம் எடுத்தும் பாத யாத்திரையாகவும் வந்து வழிபட்டனர்.

தேர்த்திருவிழாவையொட்டி பக்தர்களிடையே சமூக விரோதிகள் மற்றும் வழிப்பறியில் ஈடுபடும் ஆசாமிகளை கண்காணிக்க 150 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், மகேஸ்வரன், விஜயலட்சுமி உள்பட 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



Related Tags :
Next Story