சிவந்தியப்பர் கோவில் ஐப்பசி திருவிழா


சிவந்தியப்பர் கோவில் ஐப்பசி திருவிழா
x

சிவந்தியப்பர் கோவில் ஐப்பசி திருவிழாவில் சுவாமி- அம்பாள் பூம்பல்லக்கில் ஊர்வலம் நடந்தது.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் சிவந்தியப்பர் கோவிலில் ஐப்பசி விசு திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் ஒவ்வொரு சமுதாயம் சார்பில் ஏக சிம்மாசனத்தில் அபிஷேகம், அலங்கார தீபாராதனை, சுவாமி- அம்பாள் வீதி உலா வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் நேற்று காலை சுவாமி -அம்பாளுக்கு அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து சுவாமி-அம்பாள் பூம்பல்லக்கில் ஊர்வலமாக பாபநாசம் கோவிலுக்கு சென்று அடைந்தனர். அங்கு கோவில் முன்பு உள்ள படித்துறையில் ஐப்பசி விசு தீர்த்தவாரி நிகழ்ச்சி, இரவில் பஞ்சமூர்த்தி அலங்கார தீபாராதனை, வீதி உலா வருதல் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story