ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவிலில் அறுபத்துமூன்று நாயன்மார்கள் திருவீதி உலா


ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவிலில் அறுபத்துமூன்று நாயன்மார்கள் திருவீதி உலா
x

ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவிலில் அறுபத்துமூன்று நாயன்மார்கள் திருவீதி உலா நடைபெற்றது.

திருச்சி

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் சமேத அகிலாண்டேஸ்வரி கோவிலில் பன்னிரு திருமுறை வாரவழிபாட்டு கழகத்தின் 54-வது ஆண்டு விழா, திருமுறை விழா, அறுபத்துமூன்று நாயன்மார்கள் திருவீதி உலா ஆகிய முப்பெரும் விழா 3 நாட்கள் நடைபெற்றது.முதல் நாள் விழாவை திருவானைக்கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். நேற்று முன்தினம் காலை ஆன்மார்ந்த சிவபூஜை, சொற்பொழிவரங்கம், மாகேஸ்வர பூஜை, திருமுறை பண்ணிசை, அறுபத்துமூவர் திருமஞ்சனம் மற்றும் சிறப்பு வழிபாடு ஆகியவை நடைபெற்றன. 3-ம் நாளான நேற்று காலை 7 மணிக்கு அறுபத்துமூவர் திருநீற்றான் மதில் வலம் வந்தனர். பின்னர் திருமுறைகள் பாராயணம் மற்றும் கூட்டு வழிபாடு நடைபெற்றது. மாலை 6 மணிக்கு அறுபத்துமூன்று நாயன்மார்களுக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மாலை 7 மணிக்கு அறுபத்துமூவர் நான்காம் பிரகாரத்தில் வீதி உலா வந்து கோவிலை அடைந்தனர். இதில் திரளான சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி மற்றும் அறுபத்துமூவர் நாயன்மார்களையும் வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் பன்னிரு திருமுறை வார வழிபாட்டு கழகத்தினர் செய்திருந்தனர்.


Next Story