மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு போட்டி
சீதபற்பநல்லூரில் கல்லூரி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு போட்டி நடந்தது.
ஆலங்குளம்:
சீதபற்பநல்லூர் ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியில் மேலாண்மை துறை சார்பாக 'என்விசேஜ்-23' என்ற தலைப்பில் மாணவர் திறன் மேம்பாட்டு போட்டிகள் நடந்தது. இதையொட்டி நடந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் மதிவாணன், கல்லூரி செயலாளர் எழில்வாணன் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் வேலாயுதம், கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முருகேசன் ஆகியோர் பேசினர். டிஜிநாடு முதன்மை செயல் அதிகாரி தங்கவேல் புகழ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
மாணவர்களுக்கு தனித்திறமையை வெளிப்படுத்தும் விதமாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அனைத்து போட்டிகளிலும் முதன்மையாக செயல்பட்ட தூத்துக்குடி காமராஜ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை கைப்பற்றினர்.
முன்னதாக மாணவி ஆறுமுக பாக்கியா அனைவரையும் வரவேற்றார். முடிவில் மாணவி ராஜஸ்ரீ நன்றி கூறினார். ஏற்பாடுகளை மேலாண்மை துறை தலைவர் சுகிர்த மலர், ஒருங்கிணைப்பாளர் பிரவீன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.