பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி


பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி
x
தினத்தந்தி 24 Aug 2023 1:15 AM IST (Updated: 24 Aug 2023 1:16 AM IST)
t-max-icont-min-icon

ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி இன்றும், நாளையும் நடக்கிறது/

விருதுநகர்

விருதுநகர்

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 9 மற்றும் 10-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி இன்றும் (வியாழக்கிழமை) நாளையும் (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்திவரப்படும் ஆகஸ்டு மாதத்திற்கான பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி மாவட்ட அளவில் 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு இன்றும் நாளையும், வட்டார அளவில் வருகிற 28 மற்றும் 30-ந் தேதிகளிலும் நடத்தப்பட உள்ளது. மேலும் இந்த பயிற்சியில் கற்றல் விளைவுகள், மன எழுச்சி நலன் மேம்பாடு குறித்த பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக்கான நிதி ஒதுக்கீட்டு தொகையானது பின்னர் விடுவிக்கப்படும். எனவே 9 மற்றும் 10-ம் வகுப்பு ஆசிரியர்களுக்காக நடைபெற இருக்கும் குறு வட்ட அளவிலான வள மைய கூட்டத்தை மாவட்ட வட்டார அளவில் உரிய நாட்களில் நடத்திட வேண்டும் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story