திறன் மேம்பாட்டு பயிற்சி


திறன் மேம்பாட்டு பயிற்சி
x

அறிவியல் தொழில்நுட்ப மன்றம் சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.

ராமநாதபுரம்

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் சார்பில் கீழக்கரை முகமது சதக் என்ஜினீயரிங் கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி முதல்வர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. தகவல் தொழில் நுட்ப துறை தலைவர் பானு வரவேற்றார்.

நிகழ்ச்சியில் மதுரை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை உதவி இயக்குனர் ஜெயசெல்வம் கலந்து கொண்டு புதிதாக தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகள், அரசின் திட்டங்கள், சலுகைகள், மானியங்கள் பற்றி பேசினார். மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர் சர்மிளாதேவி, மனிதவள மேலாளர் ஆறுமுகம், வானதி, கல்லூரி அலுவலர் திராவிட செல்வி உள்பட பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சரவணன் கவுதம் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story