திறன் மேம்பாட்டு பயிற்சி


திறன் மேம்பாட்டு பயிற்சி
x
தினத்தந்தி 29 Dec 2022 12:15 AM IST (Updated: 29 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சின்னமனூர் அருகே காமாட்சிபுரத்தில் உள்ள சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு நடந்தது.

தேனி

சின்னமனூர் அருகே காமாட்சிபுரத்தில் உள்ள சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் அறிவியல் மையம் மற்றும் பெங்களூருவில் உள்ள தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையமும் இணைந்து திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பை நடத்தின. பயிற்சிக்கு அறிவியல் மைய தலைவர் பச்சைமால் தலைமை தாங்கினார். திட்ட ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன் வரவேற்றார். ஊராட்சி மன்ற தலைவர் அழகுமுத்து வாழ்த்தி பேசினார். தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தின் முதுகலை விஞ்ஞானிகள் செந்தில்குமார், சங்கர், புவனேஸ்வரி, தேனி உழவர் பயிற்சி மைய இணை பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனர். பயிற்சியில் பங்கேற்ற மக்களுக்கு வேளாண் இடுபொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது. முடிவில் தொழில்நுட்ப வல்லுனர் ரம்யா சிவசெல்வி நன்றி கூறினார்.


Related Tags :
Next Story