திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்
நாகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம்
நாகை ஏ.டி.எம் மகளிர் கல்லூரியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வேலை வாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமினை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் நடராஜன், மகளிர் திட்ட இயக்குனர் பாலமுருகன், திறன் பயிற்சி உதவி இயக்குனர் செந்தில்குமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் தீனதயாள் உபாத்யாய கிராமின் யோஜனா திட்டத்தில் சேர்க்கைக்கான விண்ணப்பங்களையும், திறன் மேம்பாட்டு பயிற்சி கழகத்தின் சார்பில் இணையத்தள பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கி பேசினார். இந்த முகாமில் திரளானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story