அரசு பள்ளி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி சான்றிதழ்


அரசு பள்ளி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி சான்றிதழ்
x

அரசு பள்ளி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அடிப்படை இயந்திரவியல் தொழிற்கல்வி பிரிவில் பயிலும் 45 மாணவர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் மூலம் 100 மணி நேரம் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கி தேர்வு நடத்தியதில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா பள்ளி தலைமை ஆசிரியர் சா. இளங்கோ தலைமையில் நடந்தது. தொழிற்கல்வி ஆசிரியர் சி.ரவிவர்மன் வரவேற்றார்.

கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இதில் க.தேவராஜி எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், பேருராட்சி தலைவர் சசிகலா மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முடிவில் தொழிற்கல்வி பயிற்றுனர் மணிகண்டன் நன்றி கூறினார்.


Next Story