வன பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
ஊட்டியில் வன பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
ஊட்டி,
ஊட்டியில் வன பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
திறன் மேம்பாட்டு பயிற்சி
நீலகிரி வனக்கோட்டம் ஊட்டி தெற்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட கேர்ன்ஹில் பொருள் விளக்க மையத்தில் வன பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. இதற்கு முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ், நீலகிரி மாவட்ட வன அலுவலர் கவுதம் ஆகியோர் தலைமை தாங்கினர். உதவி வனப்பாதுகாவலர் தேவராஜ் முன்னிலை வகித்தார்.
பயிற்சியில் நீலகிரி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட வனச்சரக அலுவலர்கள், வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், வேட்டைத்தடுப்பு காவலர்கள் மற்றும் தீத்தடுப்பு காவலர்கள், அதிவிரைவுப்படை பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
வன குற்றங்கள்
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
வனப்பகுதியில் நடைபெறும் குற்றங்களை கண்டறிதல், வகைப்படுத்துதல், அதனை கையாளுதல், படிவங்கள் பூர்த்தி செய்தல் மற்றும் அதற்கான சட்டங்கள் குறித்த விவரங்கள் வன பணியாளர்களுக்கு விளக்கப்பட்டது. மேலும், வனக்குற்றங்கள், வன உயிரின குற்றங்கள் மற்றும் இதர குற்றங்கள் தொடர்பான வன பணியாளர்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டது.இவ்வாறு அவர்கள் கூறினர்.