ஆசிரியர்களுக்கு திறன் பயிற்சி


ஆசிரியர்களுக்கு திறன் பயிற்சி
x

அரக்கோணத்தில் ஆசிரியர்களுக்கு திறன் பயிற்சி நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுரையின்பேரில் அரக்கோணம் ஒன்றியத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் 1 முதல் 5 வகுப்பு ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவ வட்டார அளவிலான பயிற்சி அரக்கோணம் ஜோதி நகர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசினர் ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல் நிலைப்பள்ளியிலும் உள்ள மையங்களில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் மனோன்மணி தலைமையில் சுமார் 315 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

பயிற்சிகள் நடைபெறும் மையங்களை ராணிப்பேட்டை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஆர்.பிரேமலதா மற்றும் வட்டார கல்வி அலுவலர் ஆறுமுகம் ஆகியோர் பார்வையிட்டு ஆசிரியர்களுக்கு அறிவியல் மனப்பான்மை மற்றும் சமூகத் திறன்களுடன் மாணவர்களின் கற்றல் நிலையை அடிப்படையாகக் கொண்டு அளிக்கப்பட வேண்டும் என்று ஆலோசனைகளை வழங்கினர்.


Next Story