செய்யது ஸ்கின் கிளினிக் திறப்பு விழா
தென்காசியில் செய்யது ஸ்கின் கிளினிக் திறப்பு விழா நடந்தது.
தென்காசி
தென்காசி ரெயில்வே பீடர் ரோட்டில் சுமார் 10 ஆண்டுகளாக இயங்கி வந்த செய்யது ஸ்கின் கிளினிக் புதிய பொலிவுடன் தென்காசி-குற்றாலம் மெயின் ரோட்டில் மேலகரம் ஸ்டேட் பேங்க் காலனி பஸ் நிறுத்தத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த கிளினிக்கை செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் ராஜேஷ் கண்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
செய்யது ஸ்கின் கிளினிக் தலைமை டாக்டர் செய்யது உசேன் வரவேற்று பேசினார். விழாவில் சமுதாய பெரியவர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story