தோல்நோய் விழிப்புணர்வு முகாம்


தோல்நோய் விழிப்புணர்வு முகாம்
x

வெள்ளாளன்விளையில் தோல்நோய் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

தூத்துக்குடி

உடன்குடி:

மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை, மாவட்ட தொழுநோய்த் தடுப்புத்துறை ஆகியவை சார்பில் வெள்ளாளன்விளை பிஷப் ஆசரியா நினைவு மேல்நிலைபள்ளியில் தோல்நோய்த் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

தோல்நோய் ஏற்படும் சூழல்கள், அதனைத் தவிர்க்கும் முறை, மருந்துகள், அரசு சார்பில் செயல்படுத்தப்படும் தோல்நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட துணை இயக்குனர் (தொழுநோய்) டாக்டர் யமுனா, வட்டார மருத்துவ அலுவலர் சு.அனிபிரிமின் ஆகியோர் பேசினா். நலக்கல்வியாளர் முத்துக்குமார், மருத்துவமில்லா மேற்பார்வையாளர்கள் ஜான்ராஜா, நியுட்டன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சேதுகுற்றாலம், சுகாதார ஆய்வாளர்கள் மந்திரமூர்த்தி, ஆழ்வார், ராஜ்குமார், பாலன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story