எஸ்.கே.வி. பள்ளியில் மாணவர் சேர்க்கை


எஸ்.கே.வி. பள்ளியில் மாணவர் சேர்க்கை
x

எஸ்.கே.வி. பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த காட்ரம்பாக்கம் கிராமத்தில் இயங்கி வரும் எஸ்.கே.வி. பள்ளியில், பள்ளி நிறுவனர் கலைக்குமார், கவிதா கலைக்குமார் தலைமையில் விஜயதசமியை முன்னிட்டு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெற்றது. அப்போது அரிசியில் தமிழ் முதல் எழுத்தான அ எழுத்தை அரிசியில் குழந்தைகளின் கையைப் பிடித்து எழுதி மாணவ- மாணவிகளை பள்ளியில் சேர்த்தனர்.

அப்போது பெற்றோர்கள் மாணவ -மாணவிகளிடம் நண்பர்கள் போன்று பழகி அவர்களின் நன்னடத்தைகளை தெரிந்து கொண்டு, கல்வி கற்க உறுதுணையாக இருக்கு வேண்டும் என பள்ளி நிர்வாகத்தின் சார்பில் தெரிவித்தனர். தொடர்ந்து பள்ளியில் சேர்ந்த மாணவ -மாணவிகளுக்கு இயற்கையின் மீது ஆர்வத்தை தூண்டும் விதமாக பள்ளி நிர்வாகத்தின் சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. மேலும் தமிழக அரசின் பசுமை காப்போம் திட்டத்தின் கீழ் பள்ளியில் படிக்கும் 1,000-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளுக்கும் மரக்கன்றுகள் வழங்கினார்கள்.


Next Story