நடிகை குஷ்பு குறித்து அவதூறு பேச்சு: சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி
நடிகை குஷ்பு குறித்து அவதூறு பேச்சு: சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி.
சென்னை,
கவர்னர் ஆர்.என்.ரவி, நடிகை குஷ்பு ஆகியோர் குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் தி.மு.க. பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சென்னை கொடுங்கையூர் போலீசாரால் கடந்த மாதம் 18-ந் தேதி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் புழல் சிறையில் உள்ளார்.
அவரது ஜாமீன் மனுவை எழும்பூர் கோர்ட்டு, சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டு ஆகியவை ஏற்கனவே தள்ளுபடி செய்தது. இந்தநிலையில் அவர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது போலீசார் தரப்பில் ஆஜரான வக்கீல், சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்தார்.
விசாரணை முடிவில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story