ரூ.34.88 லட்சத்தில் சிறுபாலம் அமைக்கும் பணிக்கு பூமிபூஜை


ரூ.34.88 லட்சத்தில் சிறுபாலம் அமைக்கும் பணிக்கு பூமிபூஜை
x

ராராமுத்திரகோட்டை ஊராட்சியில் ரூ.34.88 லட்சத்தில் சிறுபாலம் அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடந்தது.

தஞ்சாவூர்

மெலட்டூர்;

அம்மாப்பேட்டை ஒன்றியம், ராராமுத்திரகோட்டை வையாபுரி தோப்புதெரு மயான சாலையில் நெய்வாசல் தென்பாதி கிளை வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலுக்கு பாலம் கிடையாது. இந்த கிராமத்தில் யாராவது இறந்தால் உடலை மயானத்துக்கு எடுத்து செல்ல நெய்வாசல் தென்பாதி கிளை வாய்க்காலில் இறங்கி தான் உடலை மயானத்துக்கு எடுத்துசெல்லும் நிலை இருந்து வந்தது. இதனால் கிராமமக்கள் சிரமப்பட்டு வந்தனர். கிராமமக்களின் சிரமம் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் சோழன் முயற்சியால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின்கீழ் நெய்வாசல் தென்பாதி கிளை வாய்க்காலில் புதிய பாலம் அமைக்க ரூ.34.88 லட்சம் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டு நெய்வாசல் தென்பாதி கிளை வாய்க்காலில் புதிய பாலம் கட்டுவதற்கான பூமிபூஜை ராராமுத்திரகோட்டை ஊராட்சி தலைவர் சோழன் முன்னிலையில் நடைபெற்றது.இதில் வட்டார பொறியாளர் ரமேஷ், ஊராட்சி துணைதலைவர் புனிதாபிரகலாதன், ஊராட்சி செயலாளர் அசோக், பள்ளி மேலாண்மைகுழுவை சேர்ந்த சித்ராபுண்ணியமூர்த்தி, மாதர்சங்க மாநிலக்குழு உறுப்பினர் கலைச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story