சிறுதானிய விழிப்புணர்வு முகாம்
மதுரை நல்லம நாயக்கன்பட்டி கிராமத்தில் சிறுதானிய ஆண்டு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
மதுரை நல்லம நாயக்கன்பட்டி கிராமத்தில் சிறுதானிய ஆண்டு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கள்ளிக்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் உலகம்மாள் வரவேற்றார். முகாமை கலெக்டர் அனீஷ்சேகர் தொடங்கி வைத்து விவசாயிகளிடம் பேசினார். மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் விவேகானந்தன் சிறுதானியங்களின் பயன்கள் குறித்தும் நெல்லுக்கு பின் பயறு சாகுபடி குறித்தும் எடுத்துரைத்தார். ஆடு, மாடுகளுக்கு தேவையான தாதுஉப்புகள் வழங்குதல், ஊசிகள் போடுதல், குடல்புழு நீக்கம் கால்நடை இணை இயக்குனர் நடராஜ குமார் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இதில், கனராவங்கி முன்னோடி வங்கி மேலாளர், மகளிர் திட்ட அலுவலர், வட்டாட்சியர் மற்றும் பஞ்சாயத்து தலைவர் கலந்து கொண்டனர்.
பின்னர் விவசாயிகளுக்கு கலெக்டர் மற்றும் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர், விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள், மண்வெட்டி, கடப்பாரை, கதிர் அரிவாள், கொத்துவான், தார்பாய் போன்ற இடுபொருட்கள் மற்றும் குதிரைவாலி விதைகளை வழங்கினர். தொடர்ந்து சிறுதானியங்கள் மற்றும் திரவ உயிர் உரங்கள், விதைகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் குறித்த ரதம் மற்றும் அட்மா திட்டத்தின் மூலமாக கலா ஜாதா என்ற தெருக்கூத்து கலை நிகழ்ச்சியை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் சுந்தரபாண்டியன் செய்திருந்தார். முடிவில் வேளாண்மை அலுவலர் மூர்த்தி நன்றி கூறினார்.