சிறுதானிய விழிப்புணர்வு


சிறுதானிய விழிப்புணர்வு
x

சிறுதானிய விழிப்புணர்வு

திருப்பூர்

போடிப்பட்டி

வானவராயர் வேளாண்மை கல்வி நிறுவனத்தின் இளங்கலை இறுதி ஆண்டு மாணவிகள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் மடத்துக்குளம் வட்டாரத்தில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்கள் கடத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக பருப்பு தினத்தை முன்னிட்டு பயிர்களை பற்றிய விழிப்புணர்வை மாணவர்களிடயே ஏற்படுத்தினர். மண்ணின் உற்பத்தித்திறனை மேம்படுத்துதல், விவசாய முறைகளின் நெகிழ்ச்சித் தன்மையை அதிகரிப்பது, நீர் பற்றாக்குறை சூழலில் விவசாயிகளுக்கு சிறந்த வாழ்க்கையை வழங்குதல் மற்றும் பயறு வகைகளின் சாகுபடியை மேம்படுத்துதல் குறித்து விளக்கினர்.

சிறுதானியங்கள், வறண்ட சூழலியல் அமைப்பைக் கொண்ட நிலப்பகுதிகளுக்கு ஏற்றது. சர்வதேச உணவு மற்றும் விவசாய அமைப்பின்படி, வறட்சியான சூழலிலும்கூட இது நன்கு வளரக்கூடியது என்பதையும் விளக்கிக் கூறினர். அதோடு பல வகை சிறுதானியங்களை மாணவர்கள் ஆர்வத்தோடு வேறுபடுத்தி கண்டறிந்தனர். சிறுதானியங்கள் உட்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் மாணவர்களுக்கு சிறுதானிய பிஸ்கட்டுகளை வழங்கினர். கடத்தூர் அரசு தொடக்க பள்ளியில் அனைத்து வகுப்பு மாணவ மாணவியருக்கும் பல விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு ஊக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பங்கு பெற்றனர்.



Related Tags :
Next Story