அரசு பள்ளியில் சிறுதானிய உணவு திருவிழா
அரசு பள்ளியில் சிறுதானிய உணவு திருவிழா நடந்தது.
கரூர்
சிறு தானியங்களின் பயன்களை மாணவர்கள் தெரிந்து கொண்டு அந்த வகை உணவுகளை குறைந்தது வாரம் 3 நாட்கள் எடுத்து கொண்டு உடலினை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் நேற்று சிறுதானிய உணவு திருவிழா கரூர் மாவட்டம், தாந்தோணி ஒன்றியம் கவுண்டம்பாளையம் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பரணிதரன் தலைமை தாங்கினார். இதில் பள்ளி மாணவர்கள் தயாரித்து கொண்டு வந்த பயறு வகைகள், புட்டு, கேழ்வரகு கூழ், கம்பங்கூழ், அடைவகைகள், எள்ளுரண்டை, கொழுக்கட்டை, கம்பு உருண்டை, முளைகட்டிய தானியங்கள், சிறுதானிய தோசை வகைகள் என சிறு தானியங்களில் செய்த உணவு வகைகளை காட்சிப்படுத்தினர். பின்னர் ஆசிரியர்கள் ஜூலிரீட்டாமேரி, தெரசாராணி, ஜெயபாரதி, மலர் விழி ஆகியோர் சிறுதானிய உணவுகள் தயாரிப்பு மற்றும் அதன் பயன்களை மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தனர்.
Related Tags :
Next Story