ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சிறுவிடுப்பு போராட்டம்


ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சிறுவிடுப்பு போராட்டம்
x

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சிறுவிடுப்பு போராட்டம்

திருப்பூர்

திருப்பூர்

ஊரக வளர்ச்சித்துறை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றகோரி தமிழகம் முழுவதும் நேற்று சிறுவிடுப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதில் மாவட்டம் முழுவதும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கலெக்டர் அலுவலகம் உள்பட 472 பேர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊரக வளர்ச்சித்துறையில் திணிக்கப்படும் விடுமுறைதின வேலை, இரவு நேர வேலை போன்ற பணி நெருக்கடிகளை கைவிடுதல், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித்திட்ட கணினி இயக்குனர்களுக்கு அரசாணைப்படி ஊதியம் வழங்குதல், மக்கள் நலன் மற்றும் நிர்வாக நலன்களை கருத்தில் கொண்டு பெரிய ஊராட்சிகளை பிரித்து 25 ஊராட்சிகள் உள்ளடக்கிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்குதல், வளர்ச்சித்துறையில் உள்ள காலிபணியிடங்களை உடனே நிரப்புதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சிறுவிடுப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் நாளையும் நடைபெற உள்ளது. தமிழக அரசு கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வருகிற டிசம்பர் மாதம் 14-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.



Next Story