சின்னவெங்காயம் கிலோ ரூ.70-க்கு விற்பனை
சின்னவெங்காயம் கிலோ ரூ.70-க்கு விற்பனை
காங்கயம்,
காங்கயம் பஸ் நிலையம் அருகே வாரச்சந்தை வளாகம் உள்ளது. இங்கு வாரம் தோறும் திங்கட்கிழமை அன்று 500-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை நடைபெறும். வார சந்தைக்கு காங்கயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான நகர, கிராம மக்கள் இங்கு வந்து ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள், மளிகை சாமான்கள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களையும் வாங்கி செல்வார்கள்.
இதன் காரணமாகவே வாரந்தோறும் திங்கட்கிழமை இந்த சந்தை நாளில் இந்த பகுதியில் உள்ள விவசாய தொழிலாளர்கள், தேங்காய் களம், அரிசி ஆலை, தேங்காய் எண்ணெய் ஆலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு வார சம்பளத்துடன் விடுமுறை விடப்படுகிறது. இதனால் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் நகர பகுதி மக்கள் இந்த சந்தைக்கு வந்து செல்வார்கள்.
இந்த நிலையில் இன்று தீபாவளி என்பதால் நேற்று வார சந்தை நடைபெற்றது. நேற்று கூடிய வாரச்சந்தையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டது. பெரிய வெங்காயம் கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டது. முதல் தரமான தக்காளி ஒரு கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது. வாரசந்தையில் நேற்று குறைந்த அளவிலேயே கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது. பொதுமக்களின் கூட்டமும் குறைவாக காணப்பட்டது.
----