வெங்காய பட்டறை அமைக்க மானியம்
வெங்காய பட்டறை அமைக்க மானியம்
மடத்துக்குளம்
விவசாயிகளுக்கு வெங்காய பட்டறை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது என்று தோட்டக்கலைத்துறைஅதிகாரி தெரிவித்துள்ளார்.
மடத்துக்குளம் தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மானியம்
மடத்துக்குளம் தோட்டக்கலை வளர்ச்சிக்கு தேசிய தோட்டக்கலை இயக்கம் மூலம் நடப்பு நிதியாண்டில் ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தக்காளி, கத்தரி, மிளகாய், பாகல், பீர்க்கன், சுரைக்காய், மற்றும் தர்பூசணி புதிதாக பயிரிடும் விவசாயிகளுக்கு நாற்றுகள் மற்றும் இடுபொருட்கள் மானியத்தில் வழங்கப்படுகிறது. கொய்யா, பப்பாளி பயிரிடும் விவசாயிகளுக்கு அரசு தோட்டக்கலை பண்ணையில் இருந்து நாற்றுகள் வழங்கப்படும். தோட்டங்களில் நீர் சேமிப்பு கட்டமைப்பு அமைக்க ரூ. 75 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இது பின்னேற்பு மானியமாக விவசாயிகள் வங்கி கணக்கில் செலுத்தப்படும். அயல் மகரந்த சேர்க்கை அதிகரிக்க தேனீ வளர்க்க, தேனீ பெட்டிகள், தேன் எடுப்பதற்கான உபகரணங்கள் வாங்க, பவர் ஸ்பிரேயர், பவர் டில்லர் வாங்க மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு 600 சதுர அடி அளவில் சிப்பம் கட்டும் அறை அமைக்க ரூ.2 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.
வெங்காய பட்டறை
சின்ன வெங்காயம் இருப்பு வைத்து விலை கிடைக்கும் போது விற்பனை செய்யும் வகையில் வெங்காய பட்டறை அமைக்க பின்னேற்பு மானியம் வழங்கப்படுகிறது. நீர் அதிகம் ஆவியாகாமல் தடுக்கவும் களைகளை கட்டுப்படுத்தவும் நிழற் போர்வை பயன்படுத்தி தக்காளி, மிளகாய் கத்தரி, தர்பூசணி, பயிரிட விவசாயிகள் மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்யும் வகையில் காய்கறி வண்டிகள் வழங்கப்படுகிறது.
இவ்வாறுஅந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.