சிறு-குறு தொழிற்சங்க செயற்குழு கூட்டம்


சிறு-குறு தொழிற்சங்க செயற்குழு கூட்டம்
x

சிறு-குறு தொழிற்சங்க செயற்குழு கூட்டம்

நாகப்பட்டினம்

நாகை மாவட்ட சிறு மற்றும் குறு தொழிற்சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சிவகுமார் தலைமை தாங்கினார். சங்கத்தின் ஆலோசகரும், கவுரவ தலைவருமான ராமச்சந்திரன், சங்க காப்பாளர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சங்கத்தின் செயலாளர் பாலாஜி, பொருளாளர் சிவசுப்பிரமணியன், தமிழக கிரில் தயாரிப்பாளர்கள் நலச் சங்கத்தின் நாகை மாவட்ட கவுரவ தலைவர் மதியழகன், தலைவர் துரைராஜ், துணைத்தலைவர் குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சங்க வளர்ச்சிக்கும், சிறு தொழில் வளர்ச்சிக்கும் பாடுபட வேண்டும். சிறு தொழில் நிறுவனங்களுக்கு ஏற்படக்கூடிய இடர்பாடுகளுக்கு உடனடியாக தீர்வு காண்பது. கடந்த 2012-ம் ஆண்டு கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை தாக்கிய "தானே" புயலின் போது பாதிக்கப்பட்ட சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவால் மொத்த இழப்பீட்டில் 35 சதவீதம் இழப்பீடாக அந்தந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. அதேபோல் நாகை மாவட்டத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட எங்களது தொழில் நிறுவனங்களுக்கும் கோர்ட்டு மூலம் உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருவாரூர், நாகை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கஜா புயலின் போது பாதிக்கப்பட்ட சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு இதுவரை இழப்பீடு கிடைக்கவில்லை. தானே புயலின் போது வழங்கப்பட்ட இழப்பீடு போல் கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் பொருளாளர் சிவசுப்பிரமணியன் நன்றி கூறினார்.


Next Story