கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் தடுப்பூசி முகாம்


கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் தடுப்பூசி முகாம்
x

மேட்டுஇடையம்பட்டியில் கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் தடுப்பூசி முகாம் நடந்தது.

வேலூர்

அடுக்கம்பாறை

அடுக்கம்பாறை ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டு இடையம்பட்டி கிராமத்தில் கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் தடுப்பூசி மற்றும் கால்நடை சிறப்பு முகாம் இன்று நடந்தது.

ஊராட்சி மன்ற தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். துணைத்தலைவர் தென்போஸ்கோ, ஒன்றிய கவுன்சிலர் வேலாயுதம், வார்டு உறுப்பினர்கள் உமாசங்கர், தமிழ்செல்விகார்த்தி, சாவித்திரி, பிரியதர்ஷினி மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அடுக்கம்பாறை வட்டார கால்நடை மருத்துவர் காளீஸ்வரன் வரவேற்றார்.

முகாமில் 500-க்கும் மேற்பட்ட மாடுகள், 250-க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் கோழிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் ஊராட்சி செயலாளர் கணேசன், கால்நடை உதவியாளர்கள் சத்தியசீலன், கலைமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story