தூத்துக்குடி மாநகராட்சியில்ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள்அடுத்த மாதத்திற்குள் முடிக்கப்படும்:புதிய ஆணையாளர் தினேஷ்குமார்


தூத்துக்குடி மாநகராட்சியில்ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள்அடுத்த மாதத்திற்குள் முடிக்கப்படும்:புதிய ஆணையாளர் தினேஷ்குமார்
x
தினத்தந்தி 6 Feb 2023 12:15 AM IST (Updated: 6 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாநகராட்சியில்ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் அடுத்த மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று புதிய ஆணையாளர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் அடுத்த மாதத்திற்குள்(மார்ச்) முடிக்கப்படும் என்று புதிய ஆணையர் ச.தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

பொறுப்பேற்பு

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக இருந்த சாருஸ்ரீ, திருவாரூர் மாவட்ட கலெக்டராக பணியிட மாறுதல் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சியின் புதிய ஆணையராக திண்டுக்கல் மாவட்ட கூடுதல் கலெக்டராக (வளர்ச்சி) பணியாற்றி வந்த ச.தினேஷ் குமார் நியமிக்கப்பட்டார். இவர் நேற்று காலை தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்து பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார். மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்த அவரை, துணை ஆணையர் டி.குமார் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து ஆணையர் அறைக்கு சென்ற தினேஷ் குமார், கோப்புகளில் கையெழுத்திட்டு தூத்துக்குடி மாநகராட்சியின் புதிய ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

கள்ளக்குறிச்சியை சேர்ந்த இவர் 2017-ம் ஆண்டு பிரிவு ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உதவி கலெக்டராக பணியாற்றினார். மத்திய அரசின் நிதி சேவைத் துறையில் உதவி செயலாளராகவும், விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உதவி கலெக்டராகவும், திண்டுக்கல் மாவட்ட கூடுதல் கலெக்டராகவும் (வளர்ச்சி) பணியாற்றி உள்ளார்.

வளர்ச்சிக்கு...

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்ற தினேஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி மாநகராட்சியின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை வைத்து உள்ளேன். எம்.பி, அமைச்சர்கள், மேயர் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து வளர்ச்சி திட்டப்பணிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன். மக்களின் அடிப்படை தேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்து பணிகளை செய்வேன். தூத்துக்குடியில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கும் பிரச்சினை இருக்கிறது. இந்த பிரச்சினையை தீர்க்க சம்பந்தப்பட்ட அனைவருடனும் இணைந்து பணியாற்றுவேன்.

ஸ்மார்ட் சிட்டிதிட்ட பணிகள்

தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் அனைத்தும் முடிவடையும் நிலையில் உள்ளன. வரும் மார்ச் மாதத்துக்குள் அனைத்து பணிகளும் முடிவடைந்துவிடும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். எனவே, ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை குறித்த காலத்தில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மாநகராட்சியில் சாலை பணிகளுக்கான ஒப்புதல்கள் வரப்பெற்று உள்ளன. எனவே, மேயர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து சாலை பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

-


Next Story