ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் ஆய்வு
தஞ்சை மாநகராட்சியில் ரூ.966½ கோடியில் செயல்படுத்தப்படும் திட்டபணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.இதில் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி., கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்துகொண்டனர்.
தஞ்சாவூர்;
தஞ்சை மாநகராட்சியில் ரூ.966½ கோடியில் செயல்படுத்தப்படும் திட்டபணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.இதில் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி., கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்துகொண்டனர்.
ஸ்மார்ட் சிட்டி திட்டம்
தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் மாநகராட்சிகளுள் தஞ்சையும் ஒன்று. இந்த மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீ்ழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தஞ்சை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தலைமை தாங்கினார். தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.966.62 கோடி மதிப்பீட்டில் பொழுது போக்கு பூங்கா, பஸ் நிலையம், குடிநீர் வினியோகம், அங்கன்வாடி மையம் மேம்படுத்துதல், குளங்களை பாதுகாத்தல், புதிய பஸ்நிலையத்தில் வாகனம் நிறுத்துமிடம், மழைநீர் வடிகால் மேம்பாடு, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட 103 பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
விரைந்து முடிக்க உத்தரவு
மேலும் நிலுவையில் உள்ள அனைத்து திட்ட பணிகளையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவாகவும், தரமாகவும் முடித்து கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. உத்தரவிட்டார்.கூட்டத்தில் மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் சரவணகுமார், செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன், மேலாளர் ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.