டி.கொசப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளிக்குஸ்மார்ட் வகுப்பறை, கணினி வசதி செய்துதர வேண்டும்கலெக்டரிடம் பொதுமக்கள் மனு


டி.கொசப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளிக்குஸ்மார்ட் வகுப்பறை, கணினி வசதி செய்துதர வேண்டும்கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 9 May 2023 12:15 AM IST (Updated: 9 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

டி.கொசப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளிக்கு ஸ்மார்ட் வகுப்பறை, கணினி வசதி செய்துதர வேண்டும் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனா்.

விழுப்புரம்


விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சி.பழனியிடம், தமிழ்நாடு தேசிய கட்டுமானம் மற்றும் உடல்உழைப்பு தொழிலாளர்கள் சங்க தலைவர் அய்யனார் தலைமையில் பொதுமக்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியம் திருக்குணம் ஊராட்சிக்குட்பட்ட டி.கொசப்பாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 120 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். வளர்ந்து வரும் தொழில்நுட்ப சவால்களுக்கு போதிய வசதி இல்லாமல் இருக்கும் இப்பள்ளியில் படிக்கும் கிராமப்புற மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்பறை வசதி மற்றும் பள்ளி அலுவலக பணிக்கு கணினி வசதி ஆகியவற்றை ஏற்படுத்தித்தர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை ஏற்படுத்தி தந்தால் கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து, வரும் கல்வியாண்டில் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க ஆர்வமுடன் முன்வருவார்கள். அதே நேரத்தில் மாணவ- மாணவிகளுக்கும் மனஅழுத்தம் இல்லாமல் மேலும், மேலும் படிப்பதற்கு இணக்கமான சூழ்நிலை உருவாகும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற கலெக்டர், இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.


Next Story