அரசு பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்பறைகள்; சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்


அரசு பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்பறைகள்; சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்
x

ராதாபுரம் தொகுதியில் 20 அரசு பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்பறைகளை, சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி

ராதாபுரம்:

ராதாபுரம் தொகுதியில் 20 அரசு பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்பறைகளை, சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.

ஸ்மார்ட் வகுப்பறை

ராதாபுரம் தொகுதி கூடங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 20 அரசு பள்ளிகளில் தொழில்நுட்பங்களுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகளை, சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்து, மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களையும் வழங்கினார். விழாவுக்கு கலெக்டர் விஷ்ணு முன்னிலை வகித்தார்.விழாவில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:-

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகளை அமைக்க வேண்டும் என்பதற்காக கடந்த ஆண்டு இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி அனைத்து பள்ளிகளிலும் ஒரு ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டு வருகிறது. இது தமிழக வரலாற்றில் ஒரு மைல்கல்.

அனைத்து பள்ளிகளிலும்...

ராதாபுரம் தொகுதியில் அரசு ஆரம்பப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி என 97 அரசு பள்ளிகள் உள்ளன. சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அனைத்து பள்ளிகளுக்கும் கடந்த ஆண்டு நிதி, நடப்பாண்டு நிதியையும் கொண்டு அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும். இந்த திட்டத்தை கொண்டு வந்த முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், திட்ட இயக்குனர் பழனி, ராதாபுரம் தாசில்தார் ஏசுதாசன், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story