பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் அடித்து நொறுக்கப்பட்ட அ.தி.மு.க. பிரமுகரின் கார் திருக்கோவிலூர் அருகே பரபரப்பு


பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில்    அடித்து நொறுக்கப்பட்ட அ.தி.மு.க. பிரமுகரின் கார்    திருக்கோவிலூர் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 17 Oct 2022 12:15 AM IST (Updated: 17 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் அ.தி.மு.க. பிரமுகரின் கார் அடித்து நொறுக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி


திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அடுத்த அரகண்டநல்லூர் அருகே உள்ள வீரபாண்டி கிராமத்தை சேர்ந்தவர் முகமது உசேன் (வயது 72). இவர் அ.தி.மு.க.வில் கள்ளக்குறிச்சி மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளராக இருந்து வருகிறார். மேலும் சொந்த ஊரில் பெட்ரோல் பங்க் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

இவருக்கும் சித்தலிங்க மடம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் சரவணன் (42) என்பவருக்கும் இடையே வீட்டுமனை வாங்கி விற்பனை செய்தது தொடர்பாக, பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை உள்ளது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு ஒன்றும் விசாரணையில் உள்ளது.

இந்த நிலையில் முகமது உசேன் தனக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் தனது காரை வழக்கம் போல் நிறுத்தி வைத்திருந்தார். நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு சரவணன் வீரபாண்டி கிராமத்துக்கு வந்தார். அப்போது பெட்ரோல் பங்கில் நின்ற முகமது உசேனின் காரை அடித்து நொறுக்கினார். இதில் காரின் கண்ணாடி உடைந்து சேதமானது. இதுகுறித்து முகமது உசேன் அரகண்டநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சரவணன் மீது் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story