ச.ம.க. ஆலோசனை கூட்டம்


ச.ம.க. ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 23 Nov 2022 6:45 PM GMT (Updated: 2022-11-24T00:17:13+05:30)

பாவூர்சத்திரத்தில் ச.ம.க. ஆலோசனை கூட்டம் நடந்தது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

தென்காசி மாவட்ட ச.ம.க. ஆலோசனைக்கூட்டம் பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது. மாவட்டச்செயலர் டி.ஆர்.தங்கராஜ் தலைமை தாங்கினார். தொகுதிச் செயலர்கள் ஆலங்குளம் ஜெயச்சந்திர பாண்டியன், கடையநல்லூர் தலைமகன் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒன்றிய செயலர்கள் ஜான்சிங், ராஜபிரபு, ராஜ் மோகன், மணிகண்டன், நெல்லை சிவா, முருகேசன், நகர செயலர்கள் பொன் ராஜகோபால், ஜெயபாலன், முத்துராம், ஹரி ராமகிருஷ்ணன், சபரி, மற்றும் நிர்வாகிகள் குட்டி, அமல்ராஜ், ராஜகுமார், ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ச.ம.க. சார்பில் வருகிற 3-ந் தேதி நெல்லையில் நடைபெறும் மது ஒழிப்பு உண்ணாவிரத போராட்டத்தில் தென்காசி மாவட்டம் சார்பில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Next Story