சாலையில் குப்பைகளை தீவைத்து எரிப்பதால் புகை மூட்டம்


சாலையில் குப்பைகளை தீவைத்து எரிப்பதால் புகை மூட்டம்
x

பொரவச்சேரி, ஆழியூர் ஊராட்சிகளில் சாலையில் குப்பைகளை தீவைத்து எரிப்பதால் புகை மூட்டம் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

நாகப்பட்டினம்

சிக்கல்:

நாகை ஒன்றியம் பொரவச்சேரி ஊராட்சியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் எடுத்து சென்று ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் கொட்டி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது கடந்த 3 மாதமாக குப்பை மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை நாகை- திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சில இடங்களில் தீவைத்து எரித்து வருகின்றனர். தீவைத்து எரிப்பதால் ஏற்படும் புகை மூட்டதால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு சுவாச நோய்கள் ஏற்படுகிறது. இதேபோல ஆழியூர் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை ஆழியூர் மெயின் ரோட்டில் தீவைத்து எரிக்கப்பட்டு வருகிறது. அங்கு வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் ஆழியூர் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்ட இடவசதி இல்லாததால் குப்பைகளை ஆங்காங்கே தீ வைத்து எரிகக்ப்பட்டு வருகிறது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், குப்பைகளை தீவைத்து எரிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story