மின் கட்டணம் தொடர்பாக குறுஞ்செய்தி... பணம் பறிக்கும் கும்பலிடம் கவனமுடன் இருங்கள்- டிஜிபி எச்சரிக்கை
பொதுமக்கள் கவனமுடன் இருக்க கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சென்னை,
தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறி இருப்பதாவது:-
மின் வாரியத்தில் இருந்து மின் கட்டணம் தொடர்பான குறுஞ்செய்தி அனுப்புவதாக போல மோசடி பேர்வழிகள் மெசேஜ் அனுப்பவார்கள்.
அதுபோன்ற குறுஞ்செய்தி வந்தால் 100 அல்லது 112 எண்களில் தொடர்பு கொண்டு புகார் செய்யுங்கள். காவல் துறையை உதவிக்கு அழையுங்கள். நீங்கள் பணத்தை இழக்கும் பட்சத்தில் இந்தியாவில் இருந்தால் அதனை மீட்க வழி உண்டு. வெளிநாட்டுக்கு உங்கள் பணம் சென்று விட்டால் சிரமம். எனவே பொதுமக்கள் கவனமுடன் இருக்க கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story