ரூ.1 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்


ரூ.1 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
x

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருச்சி

தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை சார்ஜாவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.அப்போது ஒரு பயணி தனது பேண்ட் பாக்கெட்டில் மறைத்து எடுத்து வந்த 865 கிராம் எடையுள்ள தங்கச்சங்கிலி மற்றும் சிறிய அளவிலான தங்க கட்டியை பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் திருச்சியை சேர்ந்த யாசர்(வயது 32) என்பது தெரியவந்தது. இதேபோல் மற்றொரு பயணியான திருச்சியை சேர்ந்த ஜாகிர்உசேன்(36), பசை வடிவில் மறைத்து கடத்தி வந்த ஒரு கிலோ 83 கிராம் எடையுள்ள தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

2 பேர் கைது

இதன்படி 2 பயணிகளிடமும் இருந்து மொத்தம் 1 கிலோ 948 கிராம் எடையுள்ள ரூ.1 கோடியே 13 லட்சத்து 28 ஆயிரத்து 880 மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தங்கம் கடத்தலில் ஈடுபட்ட 2 பேரையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story