துபாயில் இருந்து நூதன முறையில் கடத்தல்: மதுரையில் 1½ கிலோ தங்கம் சிக்கியது- கீழக்கரை வாலிபரிடம் விசாரணை

துபாயில் இருந்து நூதன முறையில் கடத்தல்: மதுரையில் 1½ கிலோ தங்கம் சிக்கியது- கீழக்கரை வாலிபரிடம் விசாரணை
x

துபாயில் இருந்து நூதன முறையில் மதுரைக்கு கடத்தி வந்த 1½ கிலோ தங்கம் சிக்கியது. இதுதொடர்பாக கீழக்கரை வாலிபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதுரை

துபாயில் இருந்து நூதன முறையில் மதுரைக்கு கடத்தி வந்த 1½ கிலோ தங்கம் சிக்கியது. இதுதொடர்பாக கீழக்கரை வாலிபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விமானத்தில் தங்கம் கடத்தல்

துபாயில் இருந்து மதுரைக்கு நேற்று வந்த ஒரு தனியார் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.

அதன் பேரில் அந்த விமானத்தில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். மேலும் அவர்கள் கொண்டு வந்த உடைமைகளையும் தனித்தனியாக சோதித்தனர்.

1 கிலோ 565 கிராம் தங்கம்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியைச் சேர்ந்த நசீம் (வயது 30) என்ற பயணியின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அவரது உடைமைகளை சோதனை செய்தபோது அதில் களிமண் போன்ற பொருள் இருந்தது. அதை ஆய்வுக்கு உட்படுத்தியபோது தங்க துகள்கள் கலந்து, நூதன முறையில் பேஸ்ட் வடிவில் தங்கம் கடத்தி வந்தது தெரிய வந்தது. அந்த துகள்கள் கலந்த களிமண்ணை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் தங்கத்தை மண்ணில் இருந்து பிரித்து எடுத்தபோது, மொத்தம் 1 கிலோ 565 கிராம் இருந்தது. இதன் மதிப்பு ரூ.96 லட்சத்து 18 ஆயிரத்து 490 என அதிகாரிகள் தெரிவித்தனர். பிடிபட்ட நபரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Next Story