லோடு ஆட்டோவில் 1½ டன் ரேஷன் அரிசி கடத்தல்; வாலிபர் கைது


லோடு ஆட்டோவில் 1½ டன் ரேஷன் அரிசி கடத்தல்; வாலிபர் கைது
x

தென்காசி அருகே லோடு ஆட்டோவில் 1½ டன் ரேஷன் அரிசி கடத்தல்; வாலிபர் கைது

தென்காசி

நெல்லை குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு குற்றப்புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி தலைமையில் போலீசார் தென்காசி அருகே உள்ள சுந்தரபாண்டியபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு லோடு ஆட்டோவில் 1,575 கிலோ ரேஷன் அரிசி கேரளாவிற்கு கடத்தி சென்றது கண்டறியப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த லோடு ஆட்டோவையும், ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர். மேலும் ரேஷன் அரிசி கடத்தியதாக வேதம்புதூரை சேர்ந்த அழகேசன் (வயது 30) என்பவரை கைது செய்தனர்.


Next Story