7 டன் ரேஷன் அரிசி லாரியில் கடத்தல்


7 டன் ரேஷன் அரிசி லாரியில் கடத்தல்
x

திருவண்ணாமலையில் லாரியில் கடத்திய 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை இனாம்காரியந்தலில் உள்ள சுங்கச்சாவடி அருகில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு நடவடிக்கையாக சிறப்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது திருவண்ணாமலையில் இருந்து வேலூர் நோக்கி லாரி ஒன்று சென்றது. அதனை சப்-இன்ஸ்பெக்டர்கள் முரளி, ரவிச்சந்திரன், ஏட்டு கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

போலீசாரை கண்டதும் லாரி டிரைவர் சுங்கச்சாவடி அருகில் வாகனத்தை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

இதையடுத்து சந்தேகத்தில் பேரில் போலீசார் லாரியை சோதனை நடத்தியதில் அதில் 140 ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதன் மொத்த எடை 7 டன் ஆகும்.

அதைத்தொடர்ந்து குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் ரேஷன் அரிசி மூட்டைகளுடன் லாரியை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து ரேஷன் அரிசியை கடத்தியது யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story