காரில் ரேஷன் அரிசி கடத்தல்
களக்காடு அருகே காரில் ரேஷன் அரிசி கடத்திய 2பேரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி
நெல்லை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் நேற்று களக்காட்டில் இருந்து நாங்குநேரி செல்லும் ரோட்டில் அரசு டாஸ்மாக் கடை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 560 கிலோ ரேஷன் அரிசி கடத்திவரப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் ரேஷன் அரிசியை கடத்தி வந்த நாங்குநேரி தாலுகா நம்பிநகரை சேர்ந்த வள்ளிநாயகம் (வயது 47), மறுகால்குறிச்சியை சேர்ந்த அய்யப்பன் (32) ஆகியோரை கைது செய்தனர். மேலும் கார் மற்றும் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story