அரசு அலுவலகத்தில் மரம் வெட்டி கடத்தல்


அரசு அலுவலகத்தில் மரம் வெட்டி கடத்தல்
x
தினத்தந்தி 2 Nov 2022 12:15 AM IST (Updated: 2 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாய்பாபா காலனியில் அரசு அலுவலகத்தில் மரம் வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் மனு கொடுக்கப் பட்டது.

கோயம்புத்தூர்

சாய்பாபா காலனி

சாய்பாபா காலனியில் அரசு அலுவலகத்தில் மரம் வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் மனு கொடுக்கப் பட்டது.

மரம் வெட்டி கடத்தல்

கோவை சாய்பாபாகாலனியில் உள்ள தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவன வளாகத்தில் ஏராளமான மரங்கள் உள்ளன. இங்கு அனுமதியின்றி மரம் வெட்டி கடத்தப்படுவதாக வடக்கு கோட்டாட்சியர் பூமா, வடக்கு தாசில்தார் சரவணன் ஆகியோரிடம் புகார் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கிராம நிர்வாக அதிகாரி சித்ரா, வருவாய் ஆய்வாளர் சந்திரமதி, பசுமைக்குழு உறுப்பினர் செய்யது ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் அங்கு மரத்தை வெட்டி கடத்தியது தெரிய வந்தது.

புகார்

இது குறித்து சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்யப்பட்டது. மேலும் மரம் வெட்டி கடத்தப்பட்டது குறித்து கலெக்டர் சமீரனிடம் புகார் செய்யப்பட்டது.

இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கோவையில் உள்ள அரசு துறை அலுவலக வளாகங்களில் மதிப்புமிகுந்த பழமையான மரங்கள் உள்ளன. இவற்றை பாதுகாக்க வேண்டும் என்றனர்.


Next Story