பதுங்கி இருந்த பாம்பு பிடிபட்டது


பதுங்கி இருந்த பாம்பு பிடிபட்டது
x
தினத்தந்தி 1 Jun 2022 6:39 PM IST (Updated: 1 Jun 2022 6:42 PM IST)
t-max-icont-min-icon

பதுங்கி இருந்த பாம்பு பிடிபட்டது

மயிலாடுதுறை

சீர்காழி:-

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள செம்பதனிருப்பு கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சம்பந்தம். பால் வியாபாரி. இவருடைய வீட்டின் பின் பகுதியில் உள்ள தோட்டத்தில் சிமெண்டு சிலாப்புகளை அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இந்த சிலாப்புகளுக்கு இடையே நல்ல பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது. இதை கண்டு வீட்டில் இருந்தவர்கள் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து பாம்பு பிடி வல்லுனர் சீர்காழியை சேர்ந்த பாண்டியன் என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அங்கு சென்று பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டார். அந்த பாம்பு 6 அடி நீளம் இருந்தது. பாம்பு பிடிபட்டதை தொடர்ந்து வீட்டில் இருந்தவர்கள் நிம்மதி அடைந்தனர்.


Next Story