தொழிலாளியின் கழுத்தை இறுக்கிய மலைப்பாம்பு செத்தது


தொழிலாளியின் கழுத்தை இறுக்கிய மலைப்பாம்பு செத்தது
x

தொழிலாளியின் கழுத்தை இறுக்கிய மலைப்பாம்பு செத்தது

கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்:

காவேரிப்பட்டணம் அடுத்த குட்டப்பட்டி மேல்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 55). இவருடைய விவசாய நிலத்தில் கடந்த 12-ந் தேதி புகுந்த மலைப்பாம்பை பனகமுட்லுவை சேர்ந்த பாம்பு பிடிக்கும் தொழிலாளி நடராஜன் (55) என்பவர் பிடிக்க முயன்றார். அப்போது மலைப்பாம்பு நடராஜன் கழுத்தை இறுக்கியது. இதில் கிணற்றில் தவறி விழுந்த நடராஜன் இறந்தார். மேலும் மலைப்பாம்பு தப்பியது. இந்த நிலையில் அந்த மலைப்பாம்பு கிணற்றில் நேற்று இறந்த நிலையில் கிடந்தது. அதை பொதுமக்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.


Next Story