தேன்கனிக்கோட்டையில் சாப்பிட்டு கொண்டிருந்த தொழிலாளி முன்பு விழுந்த சாரைப்பாம்பு
தேன்கனிக்கோட்டையில்
சாப்பிட்டு கொண்டிருந்த தொழிலாளி முன்பு விழுந்த சாரைப்பாம்புதேன்கனிக்கோட்டை,
தேன்கனிக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாலையில் வசித்து வருபவர் விருமாண்டி. தொழிலாளி. இவர் நேற்று தனது வீட்டில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது அவரது முன்பு, வீட்டின் மேல்பகுதியில் இருந்து சாரைப்பாம்பு ஒன்று, எலியுடன் கீழே விழுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சாப்பாட்டு தட்டை தூக்கி எறிந்தபடி அங்கிருந்து அலறியடித்து ஓடினார். இதனிடையே சாரைப்பாம்பு அவரது வீட்டுக்குள் பதுங்கியது. இதுகுறித்து அவர் தேன்கனிக்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று வீட்டுக்குள் பதுங்கி இருந்த சாரைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அதனை மூட்டையில் கட்டி நொகனூர் காப்புக்காட்டில் பத்திரமாக விட்டனர்.