மத்தூரில் பெட்டிக்கடைக்குள் புகுந்த நாகப்பாம்பால் பரபரப்பு


மத்தூரில் பெட்டிக்கடைக்குள் புகுந்த நாகப்பாம்பால் பரபரப்பு
x
தினத்தந்தி 4 April 2023 12:15 AM IST (Updated: 4 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் கீழ்வீதி பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. வீடுகளை அடுத்து மத்தூர் ஆறு உள்ளது. கீழ் வீதி பகுதியில் கோபால் செட்டியார் ரைஸ்மில் தெரு மற்றும் அதை அடுத்துள்ள பகுதிகளில் கடந்த சில வாரங்களாக அடிக்கடி பாம்புகள் நடமாட்டத்தை பொதுமக்கள் கண்டு அச்சமடைந்து வந்தனர். கடந்த 4 நாட்களுக்கு முன்பு தையல்காரர் முருகன் என்பவர் வீட்டிற்கு குட்டி பாம்பு ஒன்று வந்தது. 2 நாட்களுக்கு முன்பு ஓய்வுபெற்ற சுகாதார ஆய்வாளர் எல்லப்பன் என்பவரின் வீட்டு வாசலில் நாகப் பாம்பு ஊர்ந்து சென்றதைக் கண்டு பொதுமக்கள் பீதி அடைந்தனர். இந்நிலையில் அதே பகுதியில் உள்ள சென்னகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடை ஒன்றில் பாம்பு நுழைவதை கண்ட வழியில் செல்லும் பொதுமக்கள் அலறினார். இதையடுத்து மத்தூர் பகுதியில் பாம்பு பிடிக்கும் வீரரான டீக்கடை மணி என்பவரை பொதுமக்கள் அழைத்து வந்து அந்த பாம்பை லாவகமாக பிடித்து மத்தூர் ஆறு செல்லும் புதர் பகுதியில் விட்டுவிட்டு வந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story