புதர்மண்டிய குடியிருப்பில் படையெடுக்கும் பாம்புகள்


புதர்மண்டிய குடியிருப்பில் படையெடுக்கும் பாம்புகள்
x
திருப்பூர்


திருப்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள ரெயில்வே ஊழியர் குடியிருப்பு பராமரிப்பின்றி புதர்மண்டி கிடக்கிறது. இதனால் இங்கு பாம்புகள் படையெடுத்து வருகின்றன.

பாம்புகள் தொல்லை

திருப்பூர் ரெயில் நிலையத்தின் முகப்பு பகுதியில் ரெயில்வே ஊழியர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்குள்ள 2 அடுக்குமாடி கட்டிடங்களில் 10 வீடுகள் உள்ளன. இங்கு ஊழியர்களின் குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் குடியிருப்பு வளாகத்தில் பராமரிப்பு பணி முற்றிலும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் கட்டிடத்தின் பின்பகுதியில் செடி, கொடிகள் அதிக அளவில் வளர்ந்து பாழடைந்த குடியிருப்பு போன்று புதர்மண்டி காணப்படுகிறது. இதில் கட்டிடத்தில் உள்ள குழாய்களிலும் கொடிகள் படர்ந்து இருப்பதால் புதருக்குள் இருக்கும் பாம்புகள் இந்த கொடி வழியாக வீட்டிற்குள் புகுந்து விடுவதாக இங்கு வசிப்பவர்கள் தெரிவிக்கின்றனர். அடிக்கடி பாம்புகள் வருவதால் வீட்டில் இருப்பவர்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.

பராமரிக்கப்படுமா?

பாம்புகளுக்கு பயந்து பெரும்பாலானவர்கள் வீடுகளின் ஜன்னல்களை திறக்காமல் எப்போதும் மூடியபடியே வைத்துள்ளனர். இதனால் சரியான காற்றோட்டம், வெளிச்சம் இன்றி சிரமப்படுகின்றனர்.

இதேபோல், சிறுவர், சிறுமிகள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கே பயப்படும் அவல நிலை உள்ளது. மேலும், இங்கு குடியிருப்பை சுற்றி புதர்மண்டி இருப்பதால் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி கொசுத்தொல்லையாலும் அவதிப்படுகின்றனர்.

இதேபோல் கழிவு நீரும் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே பராமரிப்பின்றி காணப்படும் இந்த குடியிப்பு வளாகத்தில் அடிக்கடி பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என இங்கு வசிப்போர் கோரிக்கை வைக்கின்றனர். அதிகாரிகள் இதை கவனத்தில் கொள்வார்க


Next Story