போடி ரயில் நிலையத்துக்குள் புகுந்த பாம்பு


போடி ரயில் நிலையத்துக்குள் புகுந்த பாம்பு
x

போடி ரெயில் நிலையத்துக்குள் பாம்பு புகுந்தது.

தேனி

போடி ரயில் நிலையத்தில், நேற்று மாலை 6 மணி அளவில் பாம்பு ஒன்று புகுந்தது. இதை கண்ட ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போடி தீயணைப்பு நிலையத்துக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போடி தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சுமார் ½ மணி நேரம் போராடி, ரயில்வே நடைமேடையில் பதுங்கி இருந்த பாம்பை பிடித்தனர். பிடிபட்ட பாம்பு, 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஆகும். அதனை, தீயணைப்பு வீரர்கள் வன்பகுதியில் விட்டனர்.


Next Story