காரில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
பூசாரிப்பட்டியில் காரில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்
ஓமலூர்
ஓமலூர் அருகே உள்ள பூசாரிப்பட்டி பூ மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் வேலுமணி (வயது 58). இவர் தனது காரை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். நேற்று அவர் காரை எடுக்க வந்தபோது அதில் சாரைப்பாம்பு ஒன்று புகுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இதுகுறித்து அவர் காடையாம்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் நிலைய அலுவலர் ராஜசேகர் தலைமையில் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று காரில் பதுங்கி இருந்த 4 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அந்த பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.
Next Story