பள்ளி குழந்தையின் ஷூவில் பதுங்கி இருந்த பாம்பு
சங்கரன்கோவில் அருகே பள்ளி குழந்தையின் ஷூவில் பதுங்கி இருந்த பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள சின்ன கோவிலான்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் சிறை காவலராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று அவரது குழந்தைகள் பள்ளி செல்ல தயாராகிக் கொண்டிருந்தது. அப்போது வீட்டு வாசலில் இருந்த ஒரு ஷூவை குழந்தை எடுத்து காலில் அணிவதற்கு முயன்றது. அப்போது, அதன் உள்ளே பாம்பு இருப்பதைக் கண்டு குழந்தை அதிர்ச்சி அடைந்தது.
இதுகுறித்த தகவலின் பேரில் அங்கு வந்த பாம்புபிடி வீரரான பரமேஸ்தாஸ், ஷூவில் இருந்த பாம்பை வெளியே எடுத்தார். அந்த பாம்பு கொம்பேறி மூக்கன் வகையைச் சேர்ந்தது ஆகும். பின்னர் அந்த பாம்பை அங்குள்ள காட்டுப் பகுதியில் விட்டார்.
Related Tags :
Next Story