கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தவரின் மோட்டார்சைக்கிளில் பதுங்கிய பாம்பு


கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தவரின் மோட்டார்சைக்கிளில் பதுங்கிய பாம்பு
x

கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தவரின் மோட்டார்சைக்கிளில் பதுங்கிய பாம்பு அடித்துக்கொல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்

வேலூர்

கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தவரின் மோட்டார்சைக்கிளில் பதுங்கிய பாம்பு அடித்துக்கொல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே மகளிர் சுய உதவிக்குழுவினர் நடத்தும் டீக்கடை ஒன்று உள்ளது. இந்த டீக்கடைக்கு பலர் வந்து டீக்குடித்து செல்கின்றனர். இந்தநிலையில் நேற்று மதியம் கடைக்கு ஒருவர் வந்தார். அவரது மோட்டார்சைக்கிளில் ஒரு பாம்பு பதுங்கியிருந்ததை பார்த்தார்.

அவர் மோட்டார்சைக்கிள் உரிமையாளரிடம் இதுகுறித்து தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வாகனத்தின் சீட் என ஒவ்வொரு பாகத்தையும் கழற்றினார். இறுதியில் அந்தப் பாம்பு, வாகனத்தின் முகப்பு விளக்கில் இருந்தது. அதையும் அவர் கழற்றினார். இதையடுத்து அந்தப் பாம்பை வெளியே எடுத்து வீசினார். சுமார் 2 அடி நீளம் கொண்ட பச்சை நிற பாம்பை அங்கிருந்தவர்கள் அடித்துக் கொன்றனர். இதையடுத்து வாகனத்தின் பாகத்தை திரும்ப பொருத்தி அந்த நபர் அங்கிருந்து சென்றார். இந்தச் சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.



Related Tags :
Next Story