திருவழுதிநாடார்விளையில் தெருவில் பாம்பு நடமாட்டம்
திருவழுதிநாடார்விளையில் தெருவில் பாம்பு நடமாடிய வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி
திருவழுதிநாடார்விளை:
ஏரல் அடுத்துள்ள திருவழுதிநாடார்விளை சேர்மன் கோவில் எதிரே பேவர் பிளாக் சாலை உள்ளது. இந்த சாலையின் தென்புறம் பூச்செடிகள் படர்ந்துள்ளன. சில நாட்களுக்கு முன்பு 7அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பு ஒன்று திடீரென்று தெருவில் ஊர்ந்து சென்றது. அந்த பாம்பு பேவர்பிளாக் சாலையில் பூச்செடிகள் படர்ந்துள்ள இடத்தில் புகுந்து விட்டது. பின்னர் அடிக்கடி வெளிேய வருவதும், குறிப்பிட்ட இடத்தில் சென்று பதுங்கி கொள்வதுமாக பாம்பு நடமாட்டம் இருக்கிறது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தெருவிலுள்ள பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். ஆனால் வனத்துறையினர் பாம்பை பிடிக்க வராததால், தெரு மக்கள் அச்சத்துடன் நடமாடி வருகின்றனர். ேமலும் இந்த கொடியவிஷமுள்ள பாம்பை வனத்துறையினர் உடனடியாக பிடித்து செல்ல வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Related Tags :
Next Story